அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தலைவரும் , பாராளுமன்ற உறுப்பினருமான M.H.M.நவவி அவர்களால் அக்கரைப்பற்று பகுதிக்குள் இரண்டு பாதைகள் அங்குரார்ப்பணம் செய்யும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது .
பாராளுமன்ற உறுப்பினரின் விசேட நிதியூடாக பரிசாதி தோட்டத்திலிருந்து பாலச்சோலையை இணைக்கும் வீதிக்கான செயல் திட்டத்திற்கு 1 கோடி 34 இலட்சத்திற்கு ஒரு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
அதே போன்று பாராளுமன்ற உறுப்பினருக்கு பிரதமர் ஊடாக கிடைத்த இரண்டு கோடி விசேட நிதியில் ரெட்பானா பாதைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 15 இலட்சத்திற்கான பணியும் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினரின் இந்த திட்டங்கள் அமைப்பாளர் ஆசிக் அவர்களின் வேண்டுகோளின் பிரகாரமே இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.