அஸ்ரப் ஏ. சமத்
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கம்பஹா மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநயாக்க அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்கட்சி வரிசையில் அமர இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இவர் முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவின் பேரனும் ஆவார்.
இவர் கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
3வது வரவு செலவுத் திட்டத்தின் வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களிக்கவும் அரசுக்கு எதிரான உரையொன்றை பாராளுமன்றத்தில் நிகழ்த்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று அவரது மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இருந்த சகல ஆவனங்களையும் அகற்றி தமது அலுவலகத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
கடந்த வாரம் சிரச தொலைக்காட்சியில் செய்தியில் நேரடியாக அரசை விமர்சித்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.