பிரபல நடிகை ஒருவர் நாடாளுமன்ற விதியில் அமைக்கப்பட்டள்ள பாதுகாப்பு வீதித்தடைகளை உடைத்துக்கொண்டு வாகனத்தைச் செலுத்திக் சென்றுள்ளார்.
தொலைக்காட்சி நாடகமொன்றின் படப்பிடிப்பு பூர்த்தியாகி நேற்று அதிகாலை நாடாளுமன்றத்திற்கு செல்லும் பாதை வழியாக குறித்த நடிகை வாகனத்தில் சென்றுள்ளார்.
அதிக வேகமாக சென்ற குறித்த நடிகை வீதித் தடைகளை உடைத்துக்கொண்டு சென்றுள்ளதுடன், சில பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த கோன்களுக்கும் சேதம் விளைவித்துள்ளார்.
நாடாளுமன்றிற்கு பிரவேசிக்கும் ஜயந்திபுர பிரதான வாயில் பகுதி இரவு நேரத்தில் மூடப்பட்டிருக்கும்.
குறித்த நடிகை, மோட்டார் வாகனத்தை அதிக வேகமாக செலுத்தியதனால் வீதிப்பாதுகாப்புகள் உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
விதித்தடையை உடைத்துக்கொண்டு சுமார் 30 மீற்றர் தூரம் வாகனம் சென்றுள்ளது.
இவ்வாறு கட்டுப்பாட்டை இழந்து சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி கடுமையான சேதங்களை எதிர்நோக்கியுள்ளது.
வாகன விபத்தினால் இளம் நடிக்கைக்கு ஆபத்து எதுவும் ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த நடிகை விபத்து குறித்து இளம் அமைச்சர் ஒருவருக்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார்.
விபத்து தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுப்பதனை தடுக்கும் நோக்கில் அவர் இவ்வாறு தொலைபேசியில் அறிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தலங்கம பொலிஸார் நடிகையிடம் வாக்கு மூலமொன்றை பதிவு செய்துள்ளனர்.
அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், விபத்து ஏற்படும் வகையில் வாகனம் செலுத்தியமை ஆகிய குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த நடிகைக்கு எதிராக வழக்குத்தொடரப்பட உள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.