பருவகால மாற்றம் மற்றும் புவிவெப்பமயமாதல் தொடர்பான ஐக்கியநாடு சபை சார்பில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்பதற்காக பாரிஸ் வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினார்.
கடந்த வாரம் சிரியாவில் ஐ.எஸ். கள் மீது தாக்குதல் நடத்தி வந்த ரஷ்ய போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்திய பிறகு ஒபாமாவும் புதினும் முதல் முறையாக சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பின்போது புதினிடம் கொல்லப்பட்ட ரஷ்ய விமானிக்காக தனது இரங்கலை ஒபாமா தெரிவித்தார்.
துருக்கி ரஷ்யா இடையிலான உறவு மேலும் மோசமடையும் நடவடிக்கைகளை தவிர்க்கும்படியும், சிரிய பிரச்சனையை தீர்க்க ரஷ்யாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படவேண்டும் எனவும் ஒபாமா தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.