Breaking
Mon. Dec 23rd, 2024
ஆளும் அரசாங்கம் பாரிய நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடு காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருவதை தவிர்த்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ விதாரண, ஜனவரி மாதத்திற்கு பின்னர் இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதனிடையே, நிதியமைச்சின் செயற்பாடுகள் காரணமாக நாடு பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதாக இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஏற்பாடு செய்திருந்த இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில, கம்யூனிட்ஸ் கட்சியின் பொதுச் செயலாளர் டிவ் குணசேகர மற்றும் ஜனநாயக இடது சாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாயணக்கார ஆகியோரும் கலந்து கொண்டு, அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

By

Related Post