Breaking
Mon. Dec 23rd, 2024
இறப்பர் தொழில்துறையினை நவீன மயப்படுத்த நாம் கடினமான சிரமங்களை எதிர்கொள்கிறோம். உலகசந்தையின் நிலைமை, வழங்கல் துறையில் காணப்படுகின்ற தடைகள், தொழில்நுட்பக் குறைபாடுபோன்றவை எமக்கு பல சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. மேலும் இத்துறையின் வளர்ச்சிக்கு செயற்கைஇறப்பர் இறக்குமதி மீதான இடர்பாடுகளும் தீர்க்கப்பட வேண்டும் என கைத்தொழில் மற்றும் வர்த்தகஅமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார்.
கடந்த வாரம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சர்வதேசஇறப்பர் மற்றும் பிளாஸ்டிக் கண்காட்சியின் மூன்றாவது பதிப்பின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதமஅதிதியாக கலந்துக்கொணடு உரையாற்றும் போதே அவர் இதனை வலியுறுத்தினார்.
இலங்கைக்கான இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் அரிந்தம் பாச்சி , இலங்கை பிளாஸ்டிக் மற்றும் இறப்பர்நிறுவனத்தின் தலைவர் எம்.டி. பிரின்ஜிரஸ் மற்றும் உப தலைவர் கவுஷால் ராஜபக்ஷ உட்பட பலபிரமுகர்கள் இவ் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.
இம்முறை இத்தொடர் கண்காட்சி அதன் அசலில் இருந்து விரிவடைந்துள்ளது. பொதியிடல் மற்றும் உற்பத்திதுறையினை அறிமுகப்படுத்துவதன் மூலம் இக்கண்காட்சிக்கு இணையாக நான்கு நிகழ்வுகள் இவ்வருடம்நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் தொழில் உரிமையாளர்கள் மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரிகள்தொடர்ந்தும் இக்கண்காட்சி தொடரில் கலந்து கொள்கின்றனர். இவ்வாண்டு இக்கண்காட்சியில் இந்தியா,சீனா, தைவான் மற்றும் ஜெர்மன் போன்ற நாடுகள் பங்கு பெறுகின்றன.
இந்நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடந்து வலியுறுத்துகைளில்: எமது இறப்பர் தொழில்துறைஉற்பத்திக்கு வலுவான கேள்வியுள்ளது. இறப்பர் எங்கள் பிரதான ஏற்றுமதிகளில் ஒன்றாகும். இது உள்ளூர்உற்பத்தி துறையிலும் பயன்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 195 மில்லியன் அமெரிக்க டொலர் இறப்பரைஉள்ளூர் உற்பத்திக்காக எடுத்துக்கொள்ளப்படுகின்றது.
எங்கள் அமைச்சின் தகவலின் படி 485 இறப்பர்தயாரிப்பு உற்பத்தியாளர்கள் பெரிய, நடுத்தர மற்றும் சிறிய தொழிலாளர்களாகவே காணப்படுகின்றனர். சிலர்எத்தகைய பதிவுகளும் இன்றி இத்தொழிலில் ஈடுபடுகின்றனர் என நம்பப்படுகின்றது. இது எங்கள் இறப்பர்தயாரிப்பு உற்பத்தியினை பாதிப்படைய செய்கிறது. விரைவில் அவற்றை நிவர்த்தி செய்யதேவையிருக்கிறது, இது தொடர்பில் எனது அமைச்சும் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.
உண்மையில் அரசாங்கத்தின் இறப்பர் தொழில்துறை மீதான பாரிய பெருந்திட்டம் ஆரம்பமாகியுள்ளது.

By

Related Post