Breaking
Sun. Dec 22nd, 2024
பாரிய மோசடிகள் தொடர்பான ஒன்பது விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி விசாரணைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த விசாரணைகள் தொடர்பான அறிக்கையானது எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும், இந்த விசாரணை அறிக்கை களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்  ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஒழுங்குப்படுத்தப்பட்ட 3 விசாரணை அறிக்கைகளானது ஜனாதி பதி மற்றும் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும்  ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பாரிய மோசடி தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதி பதி விசாரணை ஆணைக்குழுவிற்கு இதுவரையில் 1500 முறைப்பாடுகள் கிடை த்துள்ளதாகவும்  ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது

By

Related Post