Breaking
Mon. Dec 23rd, 2024

திறந்த பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக, நகர மண்டப சுற்றுவட்டத்தில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மூடப்பட்டுள்ள திறந்த பல்கலைக்கழகத்தை மீண்டும் திறக்குமாறு கோரி, அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் சம்மேளம் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் விஹாரமாதேவி பூங்காவுக்கு அருகில் 11 மணிக்கு ஆரம்பமாகியது.

கடந்த 22ஆம் திகதி, பல்கலைக்கழக மாணவர்களின் உடமைகள் சிலவற்றை நீக்குவதற்கு பல்கலைக்கழக பணியாளர்கள் முயற்சி செய்ததையடுத்து அங்கு நிலவிய பதற்ற நிலையை அடுத்து பல்கலைக்கழகம் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

By

Related Post