Breaking
Sun. Dec 22nd, 2024

பிரான்ஸ் தலைநகரம் பாரிசில் கடந்த 13–ந்தேதி இரவு ஐ.எஸ் கள் 8 பேர் பல இடங்களில் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 129 பேர் கொல்லப்பட்டனர். மேலும், நானூறு பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிடிக்க நடந்த போராட்டத்தின்போது, டீசல் என்ற ஏழு வயது போலீஸ் நாய் உயிரிழந்தது. டீசல் என்ற இந்த பெல்ஜியன் ஷெப்பர்டு நாய் உயிரிழந்த செய்தியை பிரென்சு போலீசார் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டனர்.

பாரிஸ் தாக்குதலுக்கு தலைமை ஏற்று செயல்பட்ட பெல்ஜியம் நாட்டை சேர்ந்த அப்துல் அமீது அபாவுத்தும், அவனது கூட்டாளிகள் சிலரும் பாரிஸ் நகரின் செயின் டெனிஸ் என்ற இடத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

நேற்று அதிகாலை நூற்றுக்கணக்கான போலீசார் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். உடனடியாக அங்கு பதுங்கி இருந்த ஒரு பெண் உடலில் குண்டுகளை கட்டி வெடிக்கச்செய்து உயிர் இழந்தார். மற்றொரு தீவிரவாதியை போலீசார் சுட்டுக்கொன்றனர். உள்ளே பதுங்கி இருந்த 5 பேரை கைது செய்தனர்.

இந்த போராட்டத்தின்போது ஐந்து போலீசாரும் காயமடைந்தனர் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர். அப்துல் அமீது அபாவுத்தை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

By

Related Post