Breaking
Mon. Jan 13th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலின் கீழ், 403 வது லங்கா சதொச கிளை அட்டாளைச்சேனை, பாலமுனை பிரதான வீதியில் நேற்று (20) திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாலமுனை அமைப்பாளர் ஹுஸைர்(SDO) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு, பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தருமான எஸ்.எம்.எம்.இஸ்மாயில் மற்றும் நுகர்வோர் அதிகார சபையின்  நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்சில், கிழக்கு மாகாண சதொச நிறுவனங்களுக்கான முகாமையாளர் மற்றும் அதிகாரிகள், ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொண்டதோடு, பொருட்கள் கொள்வனவுகளிலும் ஈடுபட்டனர்.

குறித்த சதோச நிறுவனம், பாலமுனை பிரதேச மக்களின் பல நாள் கோரிக்கையாக அமைந்திருந்தால், மக்களின் அன்றாட பொருளாதாரத்தினை தரமான பொருளாதாரமாக மாற்றியமைக்கும் நோக்கில் திறந்து வைக்கப்பட்டதுமை குறிப்பிடத்தக்கது.

(ன)

 

Related Post