Breaking
Tue. Nov 19th, 2024

பாலமுனை ஜும்ஆ பெரி பள்ளிவாயலின் கட்டிட நிர்மாணப் பணிகளின் தேவை கருதி ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் பரிபாலன சபையினர் வேண்டிக் கொண்டதற்கிணங்க, முன்னாள் தவிசாளரும் நுகர்வோர் அதிகார சபை நிறைவேற்றுப் பணிப்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸிலின் முயற்சியின் பயனாக கௌரவ அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் நிதியொதுக்கீட்டில் வழங்கப்பட்ட 2 மில்லியன் ரூபாவுக்கான காசோலை பள்ளிவாசல் பரிபாலன சபையினரிடம் கையளிக்கும் நிகழ்வு  (2019.03.16) அஷர் தொழுகையை தொடர்ந்து ஜும்ஆ பெரி பள்ளிவாசலில் இடம்பெற்றது.

மேற்படி நிதியானது பிரதான வீதியில் பள்ளிவாசலுக்கான நுழைவாயில் (GATEWAY) அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிலையில் பள்ளிவாசல் கட்டட நிர்மாணப் பணிகளை பூரணப்டுத்தும் முகமாக பின்புற வேலைகள் மற்றும் மினாறா அமைப்பதற்கு இந்நிதியை பயன்படுத்த பள்ளிவாசல் பரிபாலன சபையினர் தீர்மானித்து மீண்டும் சட்டத்தரணி அன்சிலிடம் வேண்டிக் கொண்டதனால் 2 மில்லியன் நிதியும் மினாறா மற்றும் பின்புற வேலைகளுக்கு பயன்படுத்துவதாக பரிபாலன சபையிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சட்டத்தரணி அன்சில் அவர்கள் உரையாற்றும் போது இம்மாத இறுதியில் கௌரவ அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களது அம்பாறை மாவட்ட விஜயத்தில் எமது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கும் அமைச்சர் விஜயம் மேற்கொள்வதோடு மேலும் பள்ளிவாசலுக்கான பல வேலைத்திட்டங்களை இன்ஷா அல்லாஹ் முன்னெடுப்பார் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் பரிபாலன சபை தலைவர் எம்.ஏ.அன்சார்(Tr) உள்ளிட்ட நிருவாகத்தினர், பாலமுனை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் பி.எம். ஹுசையிர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவி தவிசாளரும் பள்ளி பரிபாலன சபை உறுப்பினருமான அதிபர் எஸ்.எம்.எம். ஹனீபா, பிரதேச சபை உறுப்பினர் எச்.எம்.சிறாஜ் மற்றும் ஊர்ப் பிரமுகர்கள், நலன்விரும்பிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இதன்போது சகோதரர் பாறூக் றபீகின் ஏற்பாட்டில் கல்முனையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் அப்துல் ஜப்பார் நஜாத் என்பவரால் வழங்கப்பட்ட Water dispenser அன்பளிப்பு செய்யப்பட்டமையும் குறிப்படத்தக்கது.

Related Post