ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும நீதிமன்றில் ஆஜராகாமையினால் மத்துகம நீதிமன்ற பிரதான நீதவான் வசந்த கொசல சேனாதிர கடுமையாக எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றம் என்பது சட்டத்தை உருவாக்கும் இடமாகும் அங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்தை உருவாக்குபவர்கள் என நீதவான் தெரிவித்துள்ளார்.
சட்டத்தை உருவாக்கும் நாடாளுமன்ற உறுப்பினரான பாலித்தயே சட்டத்தை மதிக்கவில்லை என நீதவான் மேலும் தெரிவித்துள்ளார்.
பாலித்தவின் வழக்குகள் தொடர்பில் நீதிமன்றில் நேற்றைய தினம் முன்னிலையாகாத காரணத்தினால் அவரை கைது செய்யுமாறு நீதவான் பிடியானை பிறப்பித்துள்ளார்.
எவ்வாறாயினும் சற்று தாமதமாக அவருடைய வழக்கறிஞர்களுடன் தெவரப்பெரும நீதிமன்றில் முன்னிலையாகினார்.
பாலித்தவிற்கு நெஞ்சு வலி காரணமாக அவரால் நீதிமன்றில் முன்னிலையாக முடியவில்லை என அவரது வழக்கறிஞர் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 3 ஆம் வாரங்களில் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.