Breaking
Tue. Dec 24th, 2024
பாலியல் தொழிலில் ஈடுபடுவது சட்டத்திற்கு முரணானது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

வாழ்வாதாரம் கிடையாது என்பதனால் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகக் கூறி அண்மையில் சில பெண்கள் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தனர்.

எனினும் இலங்கையின் சட்டங்களின் அடிப்படையில் பாலியல் தொழிலில் ஈடுபட முடியாது.

பாலியல் தொழிலில் ஈடுபடுதல் மற்றும் பாலியல் தொழில் மையங்களை நடாத்துதல் சட்டத்திற்கு விரோதமானது. எனவே, பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவர்.

வாழ வழியில்லை இதனால் இந்த தொழிலில் ஈடுபடுகின்றேன் எனக் கூறினாலும் மன்னிப்பு கிடைக்காது.

பாலியல் தொழில் மைய கட்டளைச் சட்டத்திற்கு அமைய பாலியல் தொழில் மையத்தை முகாமைத்துவம் செய்தல், அதற்கு உதவிகளை வழங்குதல், பெண்கள் வீதியில் கட்டுப்பாடின்றி உலாவித் திரிதலும் சட்டவிரோதமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறு வயதினரை பாலியல் தொழிலை ஈடுபடுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்வோர் ஆட்களை வர்த்தகம் செய்யும் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

By

Related Post