போரின் போது பாலியல் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வரும் பிரகடனத்தை இலங்கை நேற்று(12) கைச்சாத்திட்டுள்ளது.
2013ஆம் ஆண்டு செப்டெம்பர் 25ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் நியூயோர்க் தலைமையகத்தில் 122 நாடுகள் இந்த பிரகடனத்தை ஏற்றுக்கொண்டன.
இந்த நிலையில் குறித்த பிரகடனத்தை நேற்று 155 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாத்தல், பாலியல் வன்முறைகளை தடுத்தல் போன்ற விடயங்களில் இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று தெரிவித்துள்ளது.
பாலியல் வன்முறைகள் சமாதானத்துக்கும் அபிவிருத்திக்கும் பங்கம் விளைவிக்கக்கூடியது என்ற அடிப்படையில் பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட்டதாக வெளிவிவிகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.