அமைச்சின் ஊடகப் பிரிவு
நாட்டின் வர்த்தக நிலையங்களை நுகர்வோர் அதிகார சபை நேற்றும் 22 நடாத்திய தேடுதல் நடவடிக்கைகளில் முறைகேடான விற்பனைகளில் ஈடுபட்ட 106 வர்த்தகர்கள் அகப்பட்டுள்ளனர்.
கொழும்பு – 13, கம்பஹா – 8, களுத்துறை – 5, பதுளை – 3, புத்தளம் – 6, காலி – 5, ஹம்பாந்தோட்டை- 4, மாத்தளை – 5, நுவரெலியா – 6, கண்டி – 12, மட்டக்களப்பு -6, திருகோணமலை- 4, அம்பாறை – 4, பொலநறுவை – 3, அநுராதபுரம் – 11, கேகாலை -7 என 106 வர்த்தகர்கள் அகப்பட்டதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை அரிசியை விலை கூட்டி விற்ற 54 வர்த்தகர்களும் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.