இரண்டு மாத காலமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நான் உயிருடன் இருக்கின்றேனா அல்லது இறந்து விட்டேனா என்று கூட எனது கட்சிக்காரர்கள் எவரும் கண்டு கொள்ளவில்லை, என்னை எட்டியும் பார்க்கவில்லை என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.எம்.காதர் தெரிவித்தார்.
கண்டியிலுள்ள அவரது செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
கடந்த 27 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வருகின்றபோதும் என்னை எவரும் தேடிப்பார்க்கவில்லை தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ள அதில் இணைந்து கொண்ட எமது கட்சித் தலைவர்கள் இன்று எம்மை மறந்து விட்டனர்.
உடல் நலத்தால் பாதிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் மெளனமாக இருந்த நான் இப்போது தான் ஊடகங்களுக்குக் கூட கதைக்கின்றேன்.
நாட்டின் நல்லாட்சியின் பொருட்டு பிரதமர் நாளை என்னை அழைத்தால் நான் செல்லத்தயாராகவே உள்ளேன். மக்களுக்கு நாட்டிற்கும் சேவையாற்றும் கட்சியுடன் இணைந்து செயல்படுவது சாலச்சிறந்தது என்று கருதுகின்றேன்.
இதேபோன்று சிறந்த தீர்மானங்களையும் விரைவில் எடுக்கவுள்ளேன். பெளத்தர்கள் மற்றும் தமிழ் முஸ்லிம் மக்கள் என்றும் நாட்டில் ஐக்கியமாகவே வாழ்ந்து வந்த போதும் அண்மைக்காலங்களில் அதற்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன.
அவ்வாறான தவறுகள் மீண்டும் ஏற்படாத வகையில் அனை வரும் செயல் படவேண்டும். அனைத்து இனமக்களினதும் சகவாழ்வே இந்நாட்டி ற்கு சிறந்ததாகும் என்றார்