Breaking
Tue. Dec 24th, 2024

பலரது நேரத்தை வீணாக்கி, அவர்களை அடிமைப்படுத்துவதாய் சொல்லப்படும் அதே சமூக வலைதளங்கள்தான் இன்று பல மாற்றங்களுக்கும் காரணமாக இருக்கிறது என்பதை மறுக்கவே முடியாது.

கடந்த வாரம், சமூக வலை தளங்களில் வைரலாகப் பரவிய அந்த வீடியோவைப் பார்த்த பலர் அதிர்ச்சியடைந்தனர். சிலர் ஆவேசத்தின் உச்சகட்டத்துக்கே சென்று அந்த வீடியோவை தங்கள் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் ஷேர் செய்து அதில் உள்ள கொடூரனை யார் என்று அடையாளம் தெரிந்தால் சொல்லும்படி தங்கள் நண்பர்களிடன் உதவி கேட்டு, அவனை கண்டபடி வசை பாடியிருந்தனர்.

5 அல்லது 6 வயது இருக்கும் ஒரு சிறுவனை, அவனது தந்தை கொலை வெறியுடன் மீண்டும் மீண்டும் காலால் எட்டி உதைத்து கொடூரமாய் வதைக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது. சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிய இந்த வீடியோவை, அந்தக் கொடூர கணவனின் அக்கிரமங்களை தட்டிக் கேட்க முடியாமல், யாராவது உதவுவார்கள் என்ற நம்பிக்கையில் அவரது மனைவியே எடுத்துள்ளார்.

அவரது நம்பிக்கை வீணாகவில்லை. சமூக வலைதளங்களில் அந்த வீடியோ, வைரலாகப் பரவியதையடுத்து, அந்த கொடூர தந்தை கடந்த 26-ம் தேதி தாய்லாந்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலை இழந்தது, மகனின் ஞாபக மறதி, போதை மருந்து உட்கொண்டிருந்தது என்று ஏகப்பட்ட காரணங்களை கைது செய்யப்பட்ட அந்த தந்தை கூறினாலும், அவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.

எச்சரிக்கை: இப்படிப்பட்ட மனிதர்களும் நம் சமூகத்தில் இருக்கிறார்கள் என்பதற்கான பதிவாக அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இளகிய இதயம் கொண்டவர்கள் இந்த வீடியோவைப் பார்க்க வேண்டாம்.

Related Post