ஜெயலலிதாவின் சிறப்பு மனு மீதான விசாரணையை ஒக்டோபர் மாதம் 7-ம் திகதிக்கு ஒத்திவைத்து கர்நாடக உயர் நீதிமன்றம். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஜெயலலிதாவின் பிணை மனு மீதான விசாரணை இன்று 10.30 மணியளவில் நடைபெற்றது. நேற்று இரவு அரசு சிறப்பு வழக்கறிஞராக அவசரம் அவசரமாக நியமிக்கப்பட்ட பவானி சிங் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்து மனு செய்தார். இதை ஏற்ற நீதிபதி ரத்னகலா, ஒக்டோபர் 7ம் திகதிக்கு ஒத்திவைக்க உத்தரவிட்டார். இதன் காரணமாக அக்டோபர் 7ம் திகதி வரை ஜெயலலிதா ஜாமீனில் விடுதலையாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.