Breaking
Tue. Dec 31st, 2024
பின்னவலை திறந்தவெளி மிருகக்காட்சிசாலையை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இலவசமாகப் பார்வையிட மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை பின்னவலையில் நேற்று (17) திறந்துவைக்கப்பட்டது.
முதல் நாளிலேயே சுமார் இருபதாயிரத்துக்கும் அதிகமானவர்கள் திறந்தவெளி மிருகக்காட்சிசாலையைப் பார்வையிட்டுள்ளதாக தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுர டி சில்வா குறிப்பிட்டார்.
குறிப்பாக பின்னவலை யானைகள் சரணாலயத்தைப் பார்வையிடச் செல்கின்றவர்கள், அதன் அருகாமையிலுள்ள திறந்தவெளி மிருகக்காட்சிசாலைக்கும் சென்று மிருகங்களைப் பார்வையிடுவார்கள் என நம்பப்படுகின்றது.
நாட்டின் உல்லாசப் பிரயாணத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த திறந்தவெளி மிருகக்காட்சிசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த திறந்தவெளி மிருகக்காட்சிசாலையில், சிறுத்தைகள், கரடிகள், மான்கள், முதலைகள் உட்பட பல விலங்குகளை மக்கள் கண்டு ரசிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த விலங்கினங்களின் அன்றாட நடவடிக்கைகளையும் உல்லாசப் பிரயாணிகள் அவதானிக்க முடியும்.

Related Post