Breaking
Mon. Dec 23rd, 2024

மட்டக்களப்பு – ஆரையம்பதியில் கடந்த 2008ம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைக்கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் மற்றும் அவரது சகோதரரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று காலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 03ம் திகதி வரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும்,பிரசாந்தனுக்கு பிணை வழங்கக் கோரி மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 28ம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

By

Related Post