Breaking
Mon. Dec 23rd, 2024

நாட்டில் உள்ள பிரச்சினைகளை எதிர்கால சந்ததியினர் மீது சுமத்தாமல் தேசிய அரசாங்கத்தின் மூலம் தீர்வு காண்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்று உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் தகவல் தொழில்நுட்ப நிலையத்தையும் ஐந்த மாடிகளைக் கொண்ட மாணவர் விடுதி கட்டடத் தொகுதியையும் மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் டி. ஜெயசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், சுதந்திரம் கிடைத்த நாள் முதல் இந்நாட்டில் ஏற்பட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக தற்போது பிரதான கட்சிகள் இரண்டும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளது. தேசிய அரசாங்கம் என்பது அமைச்சுப்பதவிகளை பிரித்துக்கொடுப்பதல்ல என்றும் தெரிவித்தார்.

திருகோணமலை வளாக முதல்வர் கலாநிதி வி. கணகசிங்கம் உட்பட பல பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

By

Related Post