Breaking
Thu. Dec 26th, 2024
பிரதமராகும் கனவை நனவாக்கிக் கொள்ளும் நோக்கில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, குழப்பங்களை விளைவித்து வருவதாக பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்ச எல்லாக் காலங்களிலும் யாருடைய தோளிலேனும் ஏறியே அரசியல் செய்து வருகின்றார். பிரதமராகும் கனவு அவருக்கும் இருக்கும்.

அதற்கு தேவையான முயற்சிகளில் ஒன்றாகவே தற்போது நாடாளுமன்றில் குழப்பங்களை விளைவித்து வருவதனை கருத வேண்டும்.

ஜே.வி.பியில் இருந்த காலத்தில் ஜே.வி.பி லேபளில் பிரபல்யம் அடைந்து பின்னர் கட்சியை காலல் உதைத்து விட்டு வெளியேறினார்.

பின்னர் மஹிந்தவின் கரத்தைப் பலப்படுத்துவதாகத் தெரிவித்து அவரின் தோள் மீது ஏறி அரசியல் செய்தார்.

எப்போதும் விமல் வீரவன்சவிற்கு தனக்கு என ஓர் அரசியல் நிலைப்பாடு இருக்கவில்லை.

தற்போது அவ்வாறான ஓர் தனி நிலைப்பாட்டை உருவாக்கிக் கொள்ளும் முயற்சியில் விமல் வீரவன்ச ஈடுபட்டுள்ளார்.

அவ்வாறான ஓர் விடயம் இருக்கவில்லை என உணர்ந்து கொண்ட விமல், தற்போது அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

எனினும், துரதிஸ்டவசமாக விமல் வீரவன்சவை மக்கள் ஓர் கோமாளியாகவே அடையாளம் கண்டுள்ளனர்.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்புரிமையையும் விமல் வீரவன்ச இழக்கும் நிலைமையே காணப்படுகின்றது என பிரதி அமைச்சர் அஜித் பெரேரா கொழும்பு ஊடகமொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.

By

Related Post