Breaking
Tue. Mar 18th, 2025

ஊடகவியலாளர்கள் பற்றி பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் நேற்று (28) தெரிவித்த கருத்து தொடர்பில் வருத்தமடைவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரம் வழங்கப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாரிய இலஞ்ச ஊழல்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் இன்று காலை ஆஜராகினார். அதன்போது ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். ஜனாதிபதி தேர்தலின்போது சுயாதீன தொலைக்காட்சி சேவையில் பிரசாரம் செய்ததுக்கான பணத்தை வழங்காமல் மோசடி செய்யதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலமளிக்கவே அவர் அங்கு வந்திருந்தார்.

By

Related Post