Breaking
Fri. Nov 15th, 2024
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு நாளை மறுதினம்(17) சிங்கப்பூர் செல்லவுள்ளார் என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இவ்விஜயத்தின் போது பிரதமர் சிங்கப்பூர் ஜனாதிபதி டோனி டென் கெங் யெம் (Tony Tan Keng Yam), மற்றும் பிரதமர் லீ சியென் லுல் (Lee Hsien Loong) ஆகியோருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

18 மற்றும் 19 ஆம் திகதிகளில் சிங்கப்பூர் நகர மநாட்டு நிலையத்தில் நடைபெறும் மூன்றாவது தெற்காசிய புலம்பெயர்ந்தோர் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் முக்கிய உரையொன்றினையும் ஆற்றவுள்ளார். இந்த மாநாட்டில் சுமார் ஆயிரம் அதிதிகள் வரை கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிகழ்வில் பிராந்திய முக்கிய கொள்கை வழக்குனர்கள், அறிஞர்கள், சிவில் சமூகத்தவர்கள், உள்ளிட்ட பெரும்பாலானோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

பிராந்திய எதிர்காலத்தைப் பாதிக்கும் கொள்கைகள், பொருளாதார மற்றும் வர்த்தகத்துறை தொடர்பாகவும் 21 ஆம் நூற்றாண்டில் உலக அரசியல் அரங்கில் தெற்காசிய பிராந்தியத்தின் பங்கு என்ன என்பது பற்றியும் இங்கு பேச்சுவார்த்தை நடாத்தப்படும்.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, நீதிமன்ற மற்றும் புத்தசாசன பதில் அமைச்சர் சாரதீ மித்ரபால, பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோரும் இவ்விஜயத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

By

Related Post