Breaking
Sun. Dec 22nd, 2024
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆசியுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டை அபிவிருத்தி செய்ய மேற்கொள்ளும் முயற்சிக்கு சகலரது ஒத்துழைப்புகளும் அவசியம் என ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற அரசாங்கத்திற்கு ஆதரவான பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மக்களின் நிலைப்பாடுகளை மதித்து நாட்டை அபிவிருத்தி செய்ய இடமளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

ராஜபக்சவினரும், அவரை சுற்றியிருப்பவர்களும் தற்போதை அரசாங்கம் நாட்டில் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி மற்றும் சமூக கலாசார முன்னேற்றத்திற்கு தடையேற்படுத்தி வருகின்றனர்.

நாட்டை புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற போது திறைசேரியின் கஜானா கலியாக இருந்தது. ராஜபக்ச அரசாங்கம் நாட்டை கடன் பொறியில் சிக்க வைத்திருந்தது எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

By

Related Post