பிரதமர் ரணில் விக்கிமரசிங்க இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(01) இந்தோனேசியாவிற்கு புறப்படவுள்ளார்.
இந்தோனேசிய ஜகர்த்தா நகரில் நடைபெறவுள்ள 12 ஆவது உலக இஸ்லாம் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு பிரதமர் ரணில் விக்கிமரசிங்கவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பினைத் தொடர்ந்தே அவரது இவ்விஜயம் அமைந்துள்ளது.
இந்த விஜயத்தின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தோனோசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ (Joko Widodo), நிதியமைச்சர் சிறி முல்ஜானி இந்திரவதி (Sri Mulyani Indrawati), கடல்வலயத்திற்கு பொறுப்பான அமைச்சர்கள் உட்பட சிலரை சந்தித்து இருதரப்பு கலந்துரையடல்களில் ஈடுபடவுள்ளார்.
பிரதமரின் இவ்விஜயத்தில் அவருடன் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க, மற்றும் அமைச்சர்ககளான ஹபீர் காசிம், எ.எச்.எம். பௌசி, மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோரும் கலந்து கொள்வர் என தெரிவிக்கப்படுகிறது.