Breaking
Thu. Dec 26th, 2024
ஞானசார தேரர் மீது பல முறைப்பாடுகள் செய்யப்பட்டும் அவற்றுக்கு அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தொடர்பில் நேற்று அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தேர்தல் முறை மாற்றம், அதிகாரப் பகிர்வு தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதான அமைச்சர்கள் கலந்து கொண்ட உயர் மட்டக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
ஞானசார தேரரின் நடவடிக்கையால் முஸ்லிம்கள் மன வேதனையுடனும், ஆத்திரத்துடனும் இருப்பதாகவும் அவரைக் கட்டுப்படுத்துமாறு நாங்கள் எத்தனையோ தடைவ கூறிய போதும் அவர் எல்லை கடந்தே செல்கின்றனர்.நான் உட்பட பலர் பொலிஸில் முறைப்பாடு செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை  என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அங்கு விசனம் வெளியிட்டுள்ளார்.
அப்பொது இடையில் பாய்ந்த நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியல்ல ஆகியோர் ..
 “நீங்கள் நினைப்பது போல அவரைக் கைது செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் பௌத்த தேரர்கள் குழம்புவார்கள்.”; என்று கோபமாக கூறியுள்ளனர்.
அவர்களுடைய  அந்த கருத்துக்கு பதில் அளித்துள்ள அமைச்சர் ரிஷாத் ,
“அப்படியானால் அவர் எம்மை  கேவலப்படுத்தப்படுத்த நீங்கள் சும்மா பார்த்துக் கொண்டா இருக்கப் போகிறீர்களா ? என ஆத்திரத்துடன் கேட்டுள்ளார்.
” மஹிந்த அரசாங்கத்தில் ஞானசார தேரரின் நடவடிக்கைகளை நீங்கள் பார்த்துக் கொண்டு சும்மா தானே இருந்தீர்கள் என விஜயதாச ராஜபக்ஷவும், லக்ஸ்மன் கிரியல்லவும் கேட்டுள்ளனர்.
“நான் அப்போதும் சும்மா இருக்கவில்லை அமைச்சரவையில் இருந்தும் வெளியேறி இருக்கிறேன்.அதனை மாற்றத் தானே நாங்களும் உங்களோடு ஒன்று சேர்ந்து மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பினோம்”. என்று அமைச்சர் ரிஷாட் பதில் கொடுத்துள்ளார்.
மேலும் அங்கு கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் ரிஷாத் முஸ்லிம் சமூகம் இந்த அரசாங்கத்தை ஏன் கொண்டுவந்தோம் என்ற ரீதியில் இப்போது சிந்திக்க தொடங்கியுள்ளது.அரசாங்கத்திலுள்ள சில அரசியல்வாதிகளும் முஸ்லிம் சமூகத்தைப் பற்றி பிழையான எண்ணத்தையும், கருத்துக்களையும் தெரிவிக்கின்றமையால் ஞானசார தேரரின் நடவடிக்கைகள் நாளுக்குநாள் அதிகரித்தே வருகின்றது என அமைச்சர் பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை எமது சமூகம் இந்த அரசில் தொடர்ந்து பாதிக்கப்படுகின்ற போது நாங்கள் தொடர்ந்தும் இந்தப் பதவிகளில் இருக்கப் போவதில்லை. இந்த பதவிகளையும் தூக்கியெறிய தயாராகியிருக்கின்றோம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென ஆவேசமாக பிரதமரிடம் கூறியுள்ளார். அப்போது பிரதமர் அவரை அங்கு சமாதானப்படுத்தி பேசியுள்ள அதேவேளை நான் இது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசுகிறேன் நீங்களும் கூட்டாக சென்று பேசுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் ஜே. வி. பி. தலைவர் அனுர குமார திஸநாயக, எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன், அமைச்சர் சம்பிக்க ரனவக்க, நீதியமைச்சர் விஜயதாச, லக்ஷ்மன் கிரியல்ல உட்பட பலர் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது .

By

Related Post