Breaking
Sun. Dec 22nd, 2024
ரதமர் பதவிக்காக தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தனக்கு கிடையாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி பதவிக்காக மீண்டும் நான் தேர்தலில் போட்டியிடமாட்டேன். ஒரு தடவை மாத்திரமே அந்தப் பதவியை வகிப்பேன்.

அத்துடன், ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய பின்னர் நான் பிரதமர் பதவிக்காக தேர்தலில் போட்டியிடுவேன் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவ்வாறானதொரு எண்ணம் எனக்குக் கிடையாது. மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவேண்டும். அதற்காக என்னை அர்ப்பணிப்பேன்” -என்றார்.

By

Related Post