பிரதமர் பதவியை வகிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்தால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார். வடமத்திய மாகாண ஊடகவியலாளர்களை ஜனாதிபதி செயலகத்தில் நேற்று சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். என்னை விடவும் ஆறு அமைச்சர்கள் பிரதமர் பதவியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய சேவை மூப்பைக் கொண்டுள்ளனர்.
பிரதமர் பதவியை வகிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்தால் அதனை ஏற்றுக்கொள்வதில் பிரச்சினையில்லை. திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு சுகாதார அமைச்சர் பதவி வழங்கப்பட்டமை குறித்து எவ்வித கவலையும் கிடையாது.
நாட்டின் அரசியல் சூழ்நிலைகளின் அடிப்படையில் எடுக்கப்படும் தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானது. தற்போதைய சூழ்நிலையில் அனைவரையும் திருப்திப்படுத்துவது நடைமுறைச் சாத்தியமற்றது.
அரசாங்கத்தின் எந்தவொரு தீர்மானமும் என்னை பாதிக்கவில்லை. அதிருப்தியை வெளிப்படுத்தி கட்சியை விட்டு விலகிச் செல்லும் எவ்வித உத்தேசமும் எனக்குக் கிடையாது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் நானும் ஒருவன்.