நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் சாகல ரட்நாயக்கவிடம் இந்த அதிருப்தியை பிரதமர் வெளியிட்டுள்ளார்.
வருடாந்த பொலிஸ் தினத்துக்கான ஏற்பாடுகள் குறித்து சாகல ரட்நாயக்க, பிரதமரிடம் கலந்துரையாடியபோது ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பில் பாரிய பிரச்சினைகளை உணர்வதாக குறிப்பிட்டுள்ளார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
நாட்டில் கொலை கொள்ளை மற்றும் குற்றச்செயல்கள் தொடர்வதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பம்பலப்பிட்டி வர்த்தகர் சுலைமானின் கொலையையும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் அமைச்சர் சாகல ரட்நாயக்கவுக்கும் பொலிஸ் அதிபருக்கும் உத்தரவைப்பிறப்பித்துள்ளார்.