Breaking
Sat. Jan 11th, 2025

உணவுப் பாதுகாப்பு மீதான உலகத்தின் கவனம் ஈர்க்கப்பட்டிருக்கும் இந்த ஆண்டில் இலங்கையில் முதல் முறையாக அதற்கென பிரத்தியேகமான அமைச்சொன்றை நிறுவி இலங்கை மக்களின் உணவுப் பாதுகாப்புக்காக நடவடிக்கை மேற்கொண்டமையானது இந்த அரசாங்கம் பெற்றுக்கொண்ட வெற்றியாகும் என உலக சுகாதார தினத்தை முன்னிட்டு என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது- ஒரு நாட்டின் உணவுப் பாதுகாப்பானது அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பைப் போன்றே முக்கிய விடயமாகும்

பாதுகாப்பற்ற உணவு காரணமாக உலகில் ஒரு வருடத்தில் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் இறப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கின்றது. அதனூடாக ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு எதிராக ஏற்படும் பக்க விளைவுகளை கணக்கிட்டுக் கூற முடியாதுள்ளது.

இங்கு, காலத்தின் தேவையை உறுதிப்படுத்துமுகமாக உலக சுகாதார அமைப்பு 2015 ஆம் ஆண்டின் உலக சுகாதார தினத்தின் தொனிப் பொருளை        “பண்ணையில் இருந்து பாத்திரம் வரையிலும் உணவின் பாதுகாப்பை உறுதி செய்தல்” என அறிமுகம் செய்துள்ளது.

உணவென்பது வாழ்க்கையாகும் என்பதனை உணர்ந்து பயிர் நிலத்திலிருந்து பசியைப் போக்கும் உணவு வேளை வரை போசணைமிக்க, சுகாதார ரீதியான பாதுகாப்புமிக்க உணவை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு நாட்டு மக்கள் அனைவருக்கும் இயலுமாக இருத்தல் வேண்டுமென பிரார்த்திப்பதுடன் உலக சுகாதார தினத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Post