Breaking
Mon. Nov 25th, 2024

பிரதம நீதியரசரை இனிமேல் ஜனாதிபதி நியமிக்கமாட்டார் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியும் அரசியல்வாதியே. எனவேதான், பிரதம நீதியரசரை அரசியலமைப்பு சபையினூடாக நியமிப்பதற்கான அரசியல் மறுசீரமைப்பொன்றைச் செய்யவுள்ளோம்.

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை நீக்குவது தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை.

மாறாக, அவருக்கு எதிரான விசாரணையொன்றை மேற்கொள்வதற்கு தெரிவுக்குழுவை அமைப்பது தொடர்பான பிரேரணையே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது.

அதனால் அவரை மீள நியமிப்பதை நாம் விரும்பவில்லை. சிரேஷ்ட உச்சநீதிமன்ற நீதியரசர் ஒருவரை நியமிக்க முடிவுசெய்தோம். இனிவரும் காலங்களில் பிரதம நீதியரசரை அரசியலமைப்பு சபையே நியமிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Post