Breaking
Tue. Nov 26th, 2024
மன்னார் முசலிப் பிரதேச சபையின் தவிசளார், பிரதித் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று (03) முசலிப் பிரதேச சபையில் இடம்பெற்றது. இந்த விழாவில் முசலிப் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் முகுசீன் றைசுதீன் தனது கன்னி உரையை ஆற்றினார்.
அவர் தனது உரையில் கூறியதாவது,
முசலிப் பிரதேச சபையின் பிரதித் தவிசாளராக அமர அருள்புரிந்த அல்லாஹ்வுக்கும், தேர்தலில் போட்டியிடச் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கும், வாக்களித்த மக்களுக்கும், எனது வெற்றிக்காக பாடுபட்ட முக்கியஸ்தர்களுக்கும் முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது மக்கள் சபை. ஒரு பிரதேசத்தில் தனக்கு பிரச்சினை, தேவை என்று மக்கள் உரிமையோடு நாடி வரும் முதன்மையான சபை இதுதான். எனவே துன்பதுயரத்துடன் சபைக்கு வரும் மக்கள் சிரித்த முகத்துடன் திரும்பிச் செல்ல வேண்டும்.
ஒரு பொதுமகன் எந்தக் கோலத்துடனும் இங்கு வரலாம். சபைக்கு வரும் மக்களை இனம், மதம், மொழி பாராமல்  மனிதன் என நினைத்து – விரைந்து அவர்களுக்கு  சேவையாற்ற முன்வர வேண்டும்.
இந்த சபையானது இதன் உறுப்பினர்களுக்கோ அல்லது இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கோ சேவை செய்ய உருவாக்கப்பட்டதன்று. மாறாக மக்கள் பணியாற்றவே  தாபிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Related Post