Breaking
Tue. Dec 24th, 2024

பாடசாலை அதிபர் எம்.எம்.எம்.முகைஸ் தலைமையில் இடம் பெற்ற புதிய ஆய்வு கூடத்தை இன்று (01) துறை முகங்கள் மற்றும் கப்பற்றுரை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து மாணவர்களின் பாவனைக்கு கையளித்தார்.

பிரதியமைச்சரை பாடசாலை மாணவர்கள் கலாசார ரீதியாக உற்சாக வரவேற்பளித்தார்கள்.

கல்வி அமைச்சின் “அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” தேசிய வேலைத் திட்டம் 2016-2020 திட்டத்தின் கீழ் குறித்த ஒரு மாடிக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.14 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இவ் புதிய ஆய்வு கூடம் பல நவீன வசதிகளைக் கொண்ட கற்றல் செயற்பாடுகளை உள்ளடக்கியுள்ளது.

குறித்த கட்டிட திறப்பு வைபவத்தில் திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி ஜே.அருளானந்தம், பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா, இணைப்பாளர்களான ஈ.எல்.அனீஸ், எம்.பி.எம்.முஸ்தபா, திருகோணமலை நகர சபை உறுப்பினர் எம்.எம்.எம்.முக்தார்,பிரதி கல்வி பணிப்பாளர்(திட்டமிடல்) எம்.ஏ.எம்.உனைஸ் உட்பட பெற்றார்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

Related Post