Breaking
Mon. Dec 23rd, 2024

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரசேச சபைக்குட்பட்ட துளசிபுரத்தில் 30 இலட்சம் ரூபா பெறுமதியான கொங்ரீட் வீதி உட்பட வடிகான் போன்றன நேற்று திங்கட் கிழமை துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் கௌரவ அப்துல்லா மஹ்ரூப் அவர்களால் திறந்து மக்கள் பாவனைக்கு விடப்பட்டது. இது போன்று கப்பல் துறையில் 450 மீற்றர் தூரமான கொங்ரீட் மற்றும் கிரவல் வீதிகள் செப்பணிடப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டது.

அக்போபுர,நெல்சன்புர வீதி கொங்ரீட் வீதியாக மாற்றியமைத்து பிரதியமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.மக்கள் சந்திப்பும் வீதி திறப்பின் பின் இதன் போது இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா, திருகோணமலை நகராட்சிமன்ற உறுப்பினர் கௌரவ எம்.எம்.முக்தார் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும்  ஊர்மக்களும் கலந்து கொண்டார்கள்.

Related Post