Breaking
Wed. Jan 8th, 2025

திருகோணமலை நகராக்க அபிவிருத்தி திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் திருகோணமலை ஜேஹப் பீச் விடுதியில் இடம் பெற்றது.

மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் அமைச்சர் பாட்டாலி சம்பிக ரணவக்க தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றது.நகர அபிவிருத்தி தொடர்பிலான விரிவான கலந்துரையாடல் இடம் பெற்றது . 2050 ம் ஆண்டளவில்  திருகோணமலை அபிவிருத்தியில் நகராக்கம் எப்படி இருக்குமென பல தரப்பட்ட விரிவுரைகள் “மெகா மைன்ட்ஸ்” எனும்  தொனிப் பொருளில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வுக்கு துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், அரச உயரதிகாரிகள், முப்படைகளின் உயரதிகாரிகள் உட்பட பல்வேறு திணைக்களங்களை சேர்ந்த அரச ஊழியர்கள் என பலர் பங்கேற்றார்கள்.

Related Post