Breaking
Thu. Dec 26th, 2024

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ள ஓட்டமாவடி கோட்ட கல்வி அலுவலக பிரிவில் உள்ள கஸ்டப்பிரதேச பாடசாலைகளுக்கு நேற்று இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியினால் ஒலி பெருக்கி சாதனங்களும் தளபாடங்களும் கையளிக்கப்பட்டன.

ஓட்டமாவடி கோட்ட கல்வி அலுவலக பிரிவில் உள்ள கேணிநகர் மதீனா வித்தியாலயம் மற்றும் மாஞ்சோலை அல் ஹிறா வித்தியாலயம் என்பவற்றுக்கு ஒலி பெருக்கி சாதனங்களும் காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்திற்கு அலுவலக தளபாடங்களும் தனது பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியில் இருந்து வழங்கி வைக்கப்பட்டது.

காவத்தமுனை அல் அமீன் வித்தியாலய மாணவர்களின் விளையாட்டு சீறுடை அறிமுத்தையும் ஆரம்பித்து வைத்ததுடன் மூன்று பாடசாலைகளின் தேவைகள் தொடர்பாகவும் பாடசாலை நிருவாகத்திடம் கேட்டறிந்து கொண்டதுடன் நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

Related Post