-ஊடகப்பிரிவு –
நேற்று (2017.01.09) வாழைச்சேனை ஹைராத் மீனவ சங்கத்தினர் பாராளுமன்ற கட்டிடற் தொகுதியில் வைத்து கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி தலைமையில் கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் கெளரவ மஹிந்த அமரவீர அவர்களை சந்தித்து ஆழ் கடல் மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.இக் கலந்துரையாடலின் போது பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
1.ஆழ்கடல் மீனவர்களுக்கு எதிர்காலத்தில் வழங்கப்பட இருக்கும் கடலில் பொருத்தும் கருவிகளை தவிர்த்து, அதற்கு பதிலாக பெறுமதியான வலைகள் வழங்கப்பட வேண்டும்
2.படகுகளின் உரிமையாளர்கள் மாற்றம் அடைந்திருப்பதனால் பழைய உரிமையாளர்களுக்கு கிடைக்கவிருக்கின்ற மானியங்கள்,புதிய உரிமையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
3.நீண்ட கால குறைபாடாக இருக்கும் மீனவர்கள் பயன்படுத்தும் தொடர்பு சாதனக்கருவிகளை வழங்க வேண்டும்.
என மூன்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளில் இரண்டினை ஏற்றுக் கொண்டு அவற்றை நிறைவேற்றி தருவதாகவும்,தொடர்பு சாதனக் கருவி சம்பந்தமாக பரீசீலனை செய்து எதிர்காலத்தில் பெற்றுத் தர முயற்சி செய்வதாகவும் கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதிமொழி அளித்தார்.