Breaking
Sun. Dec 22nd, 2024

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நாசீவந்தீவு மற்றும் சுங்கான்கேணி கிராமங்களில் வீதி புனரமைக்கும் ஆரம்ப நிகழ்வு நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது.

இணைப்பாளர் எஸ்.உதயக்குமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியா கலந்து கொண்டதுடன், அதிதிகளாக வாழைச்சேனை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.நிரூபா பிருந்தன், கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் சிஹாப்தீன், பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.சிவநேசராஜா, நாசிவந்தீவு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் எஸ்.தினேஸ், சுங்கான்கேணி கிராம சேவை அதிகாரி க.கிருஸ்ணகாந்த், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச மக்களும் கலந்து சிறப்பித்தனர்.

இதனடிப்படையில் நாசீவந்;தீவு மற்றும் சுங்கான்கேனி கிராமத்தில் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின்; மூலம் தலா பத்து இலட்சம் ரூபாய் வீதம் இரு வீதிகளுக்கு இருபது இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வீதிக்கான புனரமைப்பு வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Related Post