Breaking
Tue. Jan 7th, 2025

கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமங்களான ஊத்துச்சேனை மற்றும் வடமுனை பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் வழிகாட்டலில் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை இரு கிராமங்களிலும் இடம்பெற்றது.

இதனடிப்படையில் கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஊத்துச்சேனை கிராமத்தில் ஆறு மாத கால தையல் பயிற்சி முடிந்த பன்னிரண்டு யுவதிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், ஊத்துச்சேனை மற்றும் வடமுனை கிராமங்களை சேர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் ஒரு குடும்பத்துக்கு பத்து கோழிக் குஞ்சுகள் வீதம் எழுபத்தைந்து குடும்பங்களுக்கு கோழிக் குஞ்சுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

பிரதியமைச்சரின் ஊத்துச்சேனை இணைப்பாளர் எஸ்.மோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதியமைச்சரின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பு செயலாளர் ஜோன் லோகநாதன், அமைச்சரின் இணைப்பாளர்களான ஏ.அக்பர், எம்.எஸ்.றிஸ்மின் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Related Post