அஸ்ரப் ஏ சமத்
நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்சியில் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவின் வழிகாட்டலில் சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியின் முயற்சியினால் பொலநறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தை உள்ளடக்கியதாக வெலிகந்தை பிரதேச செயலாளர் பிரிவில் பாரிய சுதந்திர வர்த்தக வலயமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வியல் பூங்காவும் அமைப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் வெற்றிகரமாகபூர்த்தியடைந்துள்ளதாக பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.
பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியின் அழைப்பின் பேரில் வருகை தந்த டுபாய் நாட்டின் Gamman Groupதலைவர் ஷேக் அப்துல் றபீக் மற்றும் அவருடன் வருகை தந்த குழுவினருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கம் இடையில் 22.06.2015 திங்கட் கிழமை ஜனாதிபதி இல்லத்தில் இச் சந்திப்பு இடம் பெற்றுள்ளது.
பொலநறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தை உள்ளடக்கியதாக வெலிக்கந்தை பிரதேசத்தில் 800 ஏக்கர் காணியில் பாரிய சுதந்திர வர்த்தக வலயம் அமையப் பெறவுள்ளதாகவும் இச் சுதந்திர வர்த்தக வலயம் அமையப் பெறுவதன் மூலம் பொலநறுவை, மட்டக்களப்பு மாவட்டங்களில் தொழில்வாய்ப்பற்று இருக்கு மூவினத்தையும் சேர்ந்த முப்பத்தேழாயிரம் (37000) இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
இதேவேளை இக் குழுவினருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பயனாக 16 பல்கலைக்கழகங்களையும் உள்ளடக்கியதாக கல்வியல் பூங்கா ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 250 ஏக்கர் காணியில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் 109க்கு மேற்பட்ட கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கனிசமான உள்நாட்டு மாணவர்களும் மற்றும் வெளிநாட்டு மாணவர்களும் கல்வி கற்பதற்கான வாய்ப்புக்கள் இதன் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி மேலும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து 22.06.2015 அன்று பிற்பகல் 3.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற 2ம் கட்ட பேச்சவார்தையின் போது மேற்படி விடயத்தை துரிதமாக நடைமறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி தனது செயலாளரான திரு அபேயக்கோன் அவர்களைப் பணித்தார்.
இச் சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, டுபாய் நாட்டின் Gamman Group தலைவர் ஷேக் அப்துல் றபீக் மற்றும் அரப் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியரும் கலந்துகொண்டார்