ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நவீன வசதிகளுடன் கூடிய பற்சிகிச்சை கூடம் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.
ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நவீன பற்சிகிச்சை கதிரை மற்றும் உபகரணங்களை கல்வி அமைச்சு அவசரமாக அனுப்பி வைத்துள்ளது. இதனை பொருந்தும் பணிகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் கெளரவ ராதாகிருஷ்ணன் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் நூற்றாண்டு விழாவில் திறந்து வைக்கப்படவுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் கடந்த 24.01.2017 ஆம் திகதி கல்வி அமைச்சில் கல்வி இராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதனோடு தொடர்புடைய அதிகாரிகளுடன் பிரதி அமைச்சர் அமீர் அலி நேரில் சந்தித்து வேலைகளை துரிதப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும் கல்வி அமைச்சர் கெளரவ அகில விராஜ் காரியவசம் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் கெளரவ ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு பாடசாலை சார்பாகவும், தனிப்பட்ட ரீதியாகவும் பிரதி அமைச்சர் அமீர் அலி நன்றிகளை தெரிவித்து கொண்டார்.