Breaking
Sun. Dec 22nd, 2024

கடந்த வருடம் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைக்கப்பட்ட மாவடிச்சேனை அல் இக்பால் வித்தியாலயத்தின் நூல் கட்டிட திறப்பு விழா மற்றும் இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா ஆகிய நிகழ்வுகள் இன்று 30.01.2017 பாடசாலை அதிபர் மீராமுகைதீன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் அஷ்ரப், கோட்டக் கல்வி அதிகாரி ஜூனைட், இளைஞர் சமூக உத்தியோகத்தர் றம்ஸி , முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அல்பதா, இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் சிபாஸ் , பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

16406536_1351652214896467_7910854084972877538_n 16266286_1351652128229809_7202613790824884707_n 16427698_1351652204896468_1815763916928186596_n

By

Related Post