கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் கீழ் நியமிக்கப்பட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடனான சந்திப்பு நேற்று 03.02.2017 ஆம் திகதி பிரதி அமைச்சரின் ஓட்டமாவடி காரியாலயத்தில் இடம்பெற்றது
கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி தனது அமைச்சினால் முன்னேடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்
அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் எதிர்காலத்தில் முன்னேடுக்கப்பட இருக்கின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் செயற்திட்டங்களை தயாரித்து தனக்கு சமர்ப்பிக்குமாறு பிரதி அமைச்சர் கேட்டு கொண்டார்.
மேலும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சில செயற்திட்டங்களும் முன்வைக்கப்பட்டது .
1. செங்கல் உற்பத்தி
2. பன் தொழில்
3. பிரம்பு தொழில்
4. மட்பாண்ட உற்பத்தி
5. கஜூ தொழில்
6. தும்பு தொழில்
ஆகியன முன்வைக்கப்பட்டது.