Breaking
Sat. Jan 4th, 2025

 

கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியின் பல லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் வாழைச்சேனை செம்மண்ணோடை பிரதேசத்தில், நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் இருந்த பாதைகள் செப்பனிடப்பட்டுள்ளன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டாரக் குழு உறுப்பினர்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியிடம் வேண்டியதற்கிணங்க அல்ஹம்றா வீதி, தக்வா பள்ளிவாயல் வீதி, தக்வா பள்ளி குறுக்கு வீதி, ஓடாவியார் வீதி, வாஹித் வீதி,  நாகையடி வீதி, எல்லை வீதி ஆகிய வீதிகளின் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

Related Post