-முபீத்-
பிரதி மேயர் பதவியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு பெற்றுத்தருவோம் என்ற வாக்குறுதியின் கீழ் முஸ்லிம் காங்கிரஸ் மேயருக்கு ஆதரவு வழங்கினோம். எனினும் பிரதி மேயர் தெரிவில் மு.கா காலை வாரிவிட்டது என கல்முனை மாநகர சபை உறுப்பினர் முபீத் குற்றம் சாட்டினார்.
அவர் மேலும் கூறுகையில்,
நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்த போதும், 14 உறுப்பினர்களுடன் கல்முனை மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்கு பல இடர்களை எதிர்நோக்கினர். இந்த இக்கட்டான நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 5 உறுப்பினர்களுடன் தன்னுடன் இணைந்த 2 உறுப்பினர்களையுளும் சேர்த்து மொத்தமாக 7 உறுப்பினர்களை தம்வசம் வைத்துக் கொண்டிருந்தனர்.
ஆயினும் கல்முனையின் மேயர் பதவி கலமுனையின் பெரும்பான்மையினராகிய முஸ்லிம்களின் கையில் வந்துசேல வேண்டும் என்பதில் மக்களும் முஸ்லிம் உறுப்பினர்களும் ஒருமித்த குரலில் இருந்த வேளையில் நிந்தவூரில் பஸீல் ஹாஜியார் இல்லத்தில் நடந்த பேச்சுவார்த்தையின் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீனிடம் பிரதி அமைச்ச் ஹரீஸ் மேயர் போட்டிக்கான வாக்கெடுப்பில் தங்களுக்கு சார்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் பட்சத்தில் பிரதிமேயர் பதவிக்கான வாக்கெடுப்பில் தாங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்சுக்கு ஆதரவு வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தார்.
எனினும், மேயர் தெரிவின் போது அ.இ.ம.காவின் தலைவர் றிஷாட் பதியுதீனிடம் நான் வாக்களிப்பில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்று கேட்டபோது வரலாற்றுத் துரோகம் ஒன்றை கல்முனை முஸ்லிம்களுக்கு எமது கட்சி செய்துவிடக்கூடாது எனவே மு.கா சார்பில் போட்டியிடும் றகீபின் கையை நீங்கள் பலப்படுத்தி அவருக்கே வாக்களியுங்கள் என்று கூறியதற்கிணங்க நாங்கள் 5 பேரும் எங்களுடன் இணைந்து கொண்ட இருவருமாக மொத்தம் 7 பேரும் றகீப் மேயராக வேண்டும் என்பதற்கு ஆதரவாக வாக்களித்தோம்.
மேயர் தெரிவிற்கு முன்னால் எங்கள் தலைமையிடமும் வெற்றிபெற்ற உறுப்பினர்களிடமும் பிரதிமேயருக்கான ஆதரவினை அ. இ.ம. காவுக்கு எங்கள் கட்சி சார்பில் தெரிவான 14 உறுப்பினர்களும் வழங்குவார்கள் என்ற பிரதி அமைச்சரின் ஒப்பந்தம் வாக்களிப்பின் பின்னர் மாறிவிட்டது.
அத்தோடு என்றும் கல்முனைக்குடியின் கீழுள்ள அத்காரமற்ற ஒரு பிரதேசமாக இருந்த நற்பிட்டிமுனை இன்றிலிருந்து ஒருபுதிய பாதையில் வீறுநடை போடுவதற்கான ஓர் அரசியல் பாதையை பிரதி அமைச்சர் ஹரீஸ் வகுத்துத் தந்துள்ளார்.
எங்களால் ஆதரவு வழங்கப்பட்டு முஸ்லிம் காங்கிரஸின் மேயர் பதவிக்கான வெற்றியில் எங்கள் பிரதிமேயருக்கான இடத்தினை இழந்துவிட்டோம் என்று என்னை கேட்கும் என் மக்களுக்கு எதிர்வரும் காலங்களில் அரசியலில் தங்களும் சாய்ந்தமருதின் பாதையில் தனித்து நின்று போராடி அரசியலில் கற்றுக்கொடுக்க நினைக்கும் இந்த ரவுண்டப்போட் வாதத்தினை உடைத்து சரியான பாடத்தினை புகட்டி அதன் மூலம் எதிர்கால கல்முனை மாநகரசபையை நிதானமான முறையில் கொண்டு செல்ல என்னாலான அனைத்து முன்னெடுப்புகளையும் செய்வதே சரியான நன்றிக்கடன் என்றும் அவர் குறிப்பிட்டார்.