Breaking
Sun. Nov 17th, 2024

 -முர்ஷிட்-  

ஒரு சிசு கருவுற்று, அது பிறந்து வாழ்ந்து மரணிக்கும் வரை மக்களின் அன்றாட செயற்பாடுகளோடு ஒன்றித்து செயலாற்றுகின்ற ஒரு நிறுவனமே பிரதேச சபையாகும். இதை சிங்கள பிரதேசங்களில் வாழும் மக்கள் நன்கு உணர்ந்து செயல்படுகின்றனர் ஆனால் நமது பிரதேச மக்கள், பிரதேச சபைகளின் முக்கியத்துவங்களையும் தேவைப்பாடுகளையும் உணர்வதில்லை இதனால் சபைகளை விட்டும் மக்கள் தூர நிற்கிறார்கள் என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தெரிவித்தார்.

நிந்தவூர் அல் / ஹிதாயா பாலர் பாடசாலையின் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் கள சுற்றுப்பயணத்தின் ஓர் அங்கமாக நிந்தவூர் பிரதேச சபைக்கு வருகை தந்தனர். அவர்களை வரவேற்று உபசரித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளர் ஏ.ஏ. சலீம் மற்றும் பிரதம முகாமைத்துவ உதவியாளர் யூ.எல்.ஏ இஸ்மாயில் ஆகியோரும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post