பிரான்சில் ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு பிரதமர் மானுவல் வால்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் பிரான்சில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக, பயணிகள் குறித்த புள்ளி விபரங்களை அளிக்குமாறு ஐரோப்பாவிடம் பிரான்ஸ் கேட்டுக் கொண்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில் 129 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஐ.எஸ். களின் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பிரான்சில் முன்எப்போதும் இல்லாத அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் ரசாயன அல்லது உயிரியல் ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு பிரதமர் மேனுவல் வால்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பிரான்சிற்கு வெளியே நடக்கும் விஷயங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
பிரான்சில் தற்போது உள்ள அவசர நிலையை நீட்டிப்பது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் நடைபெற்ற விவாதத்தின் போது இதனை அவர் கூறினார்.