Breaking
Fri. Nov 15th, 2024
பிரான்ஸில் நடை பெற்றுள்ள குண்டு வெடிப்பும் துப்பாக்கி சூடும் பிரான்ஸை மட்டும் இன்றி உலகயே உலுக்கியிருக்கிறது. மனிதாபிமானம் உள்ள அனைத்து தலைவர்களும் மனிதர்களும் இந்த கொடுஞ்செயலை கண்டித்துள்ளனர்.

குறிப்பாக இஸ்லாத்திற்கும் இந்த தாக்குதலுக்கும் எந்த தொடர்ப்பும் இல்லை என்பதையும் இந்த செயலில் இறங்கியதாக கூறபடும் சிலர்கள் தங்களுக்கு இஸ்லாமிய பெயர்களை சூட்டியிருந்தாலும் இஸ்லாம் இது போன்ற கொடுஞ்செயலை ஏற்று கொள்ள வில்லைஎன இஸ்லாமிய அறிஞர்கள் இந்த நிகழ்வுக்கு பிறகு வெளியிட்டுள்ள விளக்கங்களில் தெளிவாக விளக்கியுள்ளனர்.

முஸ்லிம், மனிதேயம் மிக்கவன். மனித உயிர்களை மதிக்ககுடியவன். அதுதான் இஸ்லாத்தின் போதனை என்பதை உறுதி படுத்தும் ஒரு நிகழ்வு இந்த குண்டு வெடிப்புகளுக்கு இடையே பிரான்ஸில் நடைபெற்றது

அதை அதிகமான ஊடகங்கள் இருட்டிப்பு செய்து விட்டன

ஆயினும் The Wall Street Journal என்ற நாளிதழ் மற்ற ஊடகங்கள் இந்த மகத்தான செய்தியை இருட்டிப்பு செய்து விட்டது என்ற ஆதங்கத்தோடு  அந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

ஆம் பிரான்ஸில் தாக்குதலை நடத்தியவர்களின் முக்கிய இலக்காக இருந்தது

பிரான்ஸ் கால்பந்து மைதனமாகும்.

அந்த மைதானத்தில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மென் கால் பந்து அணிகளுக்கு இடையே அங்கு ஒரு முக்கிய போட்டி நடை பெற்று கொண்டிருந்தது

அந்த போட்டியை பிரான்ஸ் அதிபர் ஹோலண்டோ உட்பட 80 ஆயிரம் கால் பந்து ரசிகர்கள் ரசித்து கொண்டிருந்தனர். இந்த கால் பந்து மைதானத்தை தகர்த்து அங்கு இருப்பவர்களை கொலை செய்யும் நோக்த்தோடு கால்பந்து மைதானத்திர்குள் நுழைய முனைந்த பயங்கரவாதி ஒருவனை சந்தேகத்தின் பெயரில் கால்பந்து மைதானத்தில் காவலர்களில் ஒருவராக இருந்த சஹீர் என்ற முஸ்லிம் இளைஞனர் தடுத்து நிறுத்தினான்.

குறிப்பிட்ட பயங்கரவாதியோடு சஹீர் கடுமையான மோதலில் இறங்கி அந்த பயங்கரவாதி மைதானத்திர்குள் நுழையமுடியாமல் தடுத்ததின் மூலம் பிரான்ஸ் அதிபர் ஹோலண்டோ உட்பட 80 ஆயிரம் மக்களின் உயிரை முஸ்லிம் இளைஞன் சஹீர் இறையருளால் காப்பாற்றினான்.

அந்த முஸ்லிம் இளைஞன் குறிப்பிட்ட பயங்கரவாதியை அரங்கத்தில் நுழையவிட்டிருந்தால் பிரான்ஸ் அதிபர் ஹோலண்டோ உட்பட 80 ஆயிரம் ரசிகர்களின் உயிர் கேள்விகுறியாக மாறியிருக்கும்.

இஸ்லாமிய இளைஞன் குறிப்பிட்ட பங்கரவாதியை தடுத்து நிறுத்திய மூன்றாவது நிமிடத்தில் அரங்கத்தின் வெளியே குண்டு வெடிப்பும் துப்பாக்கி சூடும் நடைபெற்றது என்பது குறிப்பிட தக்க விசயமாகும்.

ஊடகங்களால் மறைக்கபடும் இந்த செய்தியை நாம் உலகத்திர்கு எடுத்து செல்வோம் முஸ்லிம்கள் மனித நேயம் நிறைந்தவர்கள் என்ற உண்மையை உலகிர்கு உணர்த்துவோம்.

http://www.wsj.com/articles/attacker-tried-to-enter-paris-stadium-but-was-turned-away-1447520571
http://www.dailymail.co.uk/news/article-3318701/Suicide-bomber-tried-France-Germany-football-game-security-guard-explosive-vest-pat-down.html

By

Related Post