பாரீஸ் நகரில் ஐ.எஸ் கள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து அந்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள வருத்தத்தை விட ஜனாதிபதி மீது அளவுகடந்த கோபமே மேலோங்கி இருப்பதாக சுவிஸ் பத்திரிகை பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் ஐ.எஸ் கள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, சுவிட்சர்லாந்து எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், தாக்குதலில் சுவிஸ் நாட்டை சேர்ந்தவர்கள் பலியாகவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சுவிஸில் வெளியாகும் SonntagsZeitung என்ற பத்திரிகை பாரீஸ் தாக்குதலை தொடர்ந்து அந்நாட்டு அதிபரான பிராங்கோயிஸ் ஹாலண்டேவின் பதவிக்கு ஆபத்து ஏற்படும் சூழல் நிலவி வருவதாக செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், பாரீஸ் தாக்குதலை தொடர்ந்து ஐ.எஸ்.கள் மீது இரக்கமின்றி போர் தொடுக்க உள்ளதாக அதிபர் தெரிவித்த்துள்ளார்.
ஆனால், பிரான்ஸ் அதிபரால் ஐ.எஸ்.கள் மீது தாக்குதல் மட்டுமே நடத்த முடியுமே தவிர, அந்நாட்டு மக்களுக்கு உரிய பாதுகாப்பை ஏற்படுத்த முடியுமா? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
பாரீஸில் தற்கொலை படை தாக்குதலை நிகழ்த்திய 8 பேரில் ஒருவனை பற்றி அந்நாட்டு புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது.
ஆனால், தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாமல் பல பேரின் உயிரை பறிக்க நேரிட்டுள்ளது.
2015ம் ஆண்டு ஜனவரி மாதம் தாக்குதலுடன்(சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகம்) தொடங்கியது. தற்போது, பாரீஸ் தாக்குதலுடன் இந்தாண்டு நிறைவடைய உள்ளது.
ஆனால், பயங்கரவாதத்திற்கு எதிராக நாட்டு மக்களின் சுதந்திரத்தை காக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படவில்லை.
பாரீஸ் தாக்குதலில் மக்களுக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளதை விட, அந்நாட்டு ஜனாதிபதி மீது கோபமே அதிகரித்து அவர் மீதுள்ள நம்பிக்கையையும் மக்கள் இழந்துள்ளனர்.
இனிவரும் காலங்களில், குடிமக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாவிட்டால், பிரான்ஸ் ஜனாதிபதியின் பதவிக்கும் விரைவில் ஆபத்து ஏற்படும் என SonntagsZeitung பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.